வரலாற்று வெற்றி" நியூசிலாந்தை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நைஜீரியா! - Seithipunal
Seithipunal


19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், நியூசிலாந்த் அணியை வீழ்த்தி நைஜீரியா அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

மலேசியாவில் இன்று நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. ஆனால், மழையால் 13 ஓவர்களுக்கு குறைக்கப்பட, முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா, 6 விக்கெட்டுகள் இழப்பில் 65 ரன்கள் எடுத்து. 

இதனையடுத்து வெற்றிக்கான 66 ரன்களை எடுக்க களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்து 57 ரன்கள் மட்டும் எடுத்தனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நைஜீரியா அணி வீரர் லில்லியன் உடே சிறப்பாக பந்துவீசி வெற்றியை உறுதி செய்தார். 

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, பொதுவாக கால்பந்து மற்றும் தடகள போட்டிகளுக்காக பெயர்பெற்றது. கிரிக்கெட்டில் குறைந்த வரவேற்பை கொண்டிருந்தாலும், ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதல் முறையாக ஐசிசி தொடரில் பங்கேற்ற நைஜீரியா, நியூசிலாந்து வலிமை வாய்ந்த ஒரு அணியை வீழ்த்தி அனைவரையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC t20 under 19 woman NZ vs NIG


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->