மெக்கா : வெப்ப அலையால் 68 இந்தியர்கள் உட்பட 645 ஹஜ் பயணிகள் பலி !! - Seithipunal
Seithipunal



இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும். சவூதி அரேபியாவின் மெக்கா நகரத்தில் தான் நபிகள் நாயகம் பிறந்தார் என்று கூறப்படுவதுண்டு. இந்த புனித மெக்கா நகருக்கு இஸ்லாமியர்கள் தங்கள் புனித மாதமான துல்ஹஜ் மாதத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் கடைபிடிக்கப் படுகிறது.

மேலும் இஸ்லாமியரின் புனித நகரான மெக்கா நகருக்குள் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த திங்கட்கிழமை அதிகபட்சமாக 51.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், மெக்காவில் அதிக வெப்ப அலை, கூட்ட நெரிசல், மற்றும் வயது மூப்பு ஆகிய காரணங்களினால் இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 323 எகிப்தியர்கள், 60 ஜோர்டானியர்கள், 30க்கும் மேற்பட்ட துனீஷியர்கள், மற்றும் 68 இந்தியர்களும் இருந்துள்ளதாக தூதரக அதிகாரிகள் உறுதிப் படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக புனித மெக்கா நகருக்கு உலகெங்கிலும் இருந்து சுமார் 18 லட்சம் இஸ்லாமியர்கள் வருவார்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதையடுத்து அங்கு நிலவும் கடும் வெப்ப அலையை சமாளிக்கும் பொருட்டுமெக்கா வரும்  ஹஜ் பயணிகள் தங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்படி சவூதி அரேபிய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Including 68 Indians 645 Hajj Pilgrims Died Due to Over Heat Wave in Mekkah


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->