தேர்தலுக்காக நேபாளத்திற்கு 200 வாகனங்களை பரிசாக வழங்கியது இந்தியா.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் இந்த மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக இந்தியா 200 வாகனங்களை நேபாளத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற ஒரு விழாவில், நேபாளத்துக்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, இந்திய அரசின் சார்பில், நேபாளத்தின் பல்வேறு நிறுவனங்களுக்குத் தேர்தல் நடத்துவதற்கான தளவாட உதவிக்காக 200 வாகனங்களை அன்பளிப்பாக நிதியமைச்சர் ஜனார்தன் ஷர்மாவிடம் வழங்கினார்.

இதில் 120 வாகனங்கள் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிற்காகவும், 80 வாகனங்கள் நேபாள தேர்தல் ஆணையத்தின் பயன்பாட்டிற்காகவும் உள்ளன. மேலும் இந்த வாகனங்கள் நாடு முழுவதும் உள்ள நேபாளத்தின் பல்வேறு நிறுவனங்களின் தளவாட ஏற்பாடுகளை மேலும் அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வாகனங்களை பரிசளிப்பது உட்பட, நேபாளத்துடனான வளர்ச்சி கூட்டாண்மை வடிவில் தொடர்ந்து ஆதரவளிக்கும் இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நிதி அமைச்சர் சர்மா நன்றி தெரிவித்தார்.

இதுவரை, தேர்தல்களின் போது இந்தியா நேபாளத்திற்கு 2400 வாகனங்கள் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India gifts 200 vehicles to Nepal for election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->