ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய பிரதமர் மோடி.!  - Seithipunal
Seithipunal


இந்தோனேசியாவில் நடைபெற்ற 'ஜி-20' உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி இந்திய நாட்டின் சார்பில், நாட்டின் கலாசார செழுமையையும், பாராம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில், கலை படைப்புகள் மற்றும் பொருட்களை நினைவுப்பரிசுகளாக வழங்கினார். 

இதுபற்றிய விவரங்கள் வருமாறு:- 

* உச்சி மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 'சிருங்கர் ராசா'வை சித்தரிக்கும் காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களையும், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, குஜராத்தில் பெண் தெய்வ கோவில்களுக்கு காணிக்கையாக வழங்குகிற கைத்தறி ஆடையையும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு, குஜராத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைப்பொருளான பித்தோராவையும் வழங்கினார். 

அதேபோல், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு 'படன் படோலா' துப்பட்டாவையும், பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசாக, குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய கைவினைப் பொருளான 'அகேட்' கிண்ணங்கள் பிரதமர் மோடி வழங்கினார்.

* இதையடுத்து, 'ஜி-20' உச்சி மாநாட்டை நடத்திய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு குஜராத்தின் சூரத் நகரின் திறமையான தொழிலாளிகளால் செய்யப்பட்ட தனித்துவமான, நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட வெள்ளிக் கிண்ணம் மற்றும் இமயமலைப்பகுதியில் சிறப்பு வாய்ந்த கின்னவுர் சால்வை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கினார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india prime minister memorial gift for world leaders in g20 confetrence meeting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->