சிகாகோவில் இந்திய மாணவர் கொலை - இந்திய தூதரகம் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சிகாகோவில் இந்திய மாணவர் நுகரபு சாய் தேஜா, பெட்ரோல் பங்கில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் தேஜா நுகராப்பு என்ற மாணவன் சிகாகோவில் எம்பிஏ பட்டப் படிப்பு படிக்கும் நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், பெட்ரோல் பங்கிற்கு திடீரென்று வந்த மர்மக் கும்பல் ஒன்று சாய் தேஜாவைச் சுட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றது. 

இதைப்பார்த்த சக ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சிகாகோ நிர்வாகத்தை அங்குள்ள இந்தியத் தூதரக அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது:- “இந்திய மாணவர் நுகரபு சாய் தேஜாவின் கொலையால் நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்யும்" என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian embassy condems indian student murder in Chicago


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->