பட்டமளிப்பு விழாவிற்கு மூவர்ண கொடியுடன் சென்ற இந்திய மாணவர்.! - Seithipunal
Seithipunal


பட்டமளிப்பு விழாவிற்கு மூவர்ண கொடியுடன் சென்ற இந்திய மாணவர்.!

வெளிநாட்டில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா ஒன்றில் இந்திய மாணவர் தேசிய கொடியுடன் மேடைக்கு நடந்து வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனிஷ் ஷரன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், அந்த மாணவர் பட்டமளிப்பு விழாவுக்காக பாரம்பரிய ஆடையான குர்தா மற்றும் வேட்டியுடன் மேடை ஏறி உள்ளார். பட்டப்படிப்புக்கான அங்கியுடன் மேடையில் நடந்து சென்ற அவர் அங்கிருக்கும் முக்கிய பிரமுகர்களை கைகூப்பி நமஸ்தே என்று வணக்கம் சொல்கிறார். 

இதையடுத்து அவர் தனது பட்டத்தை வாங்குவதற்காக சென்ற போது பாக்கெட்டில் இருந்து மூவர்ண கொடியை எடுத்து பார்வையாளர்களுக்கு காட்டி விட்டு பிறகு பட்டம் பெற்றுள்ளார். அவரை பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்துகின்றனர். 

இந்த வீடியோ வைரலாகி 7.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 34 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் வாரிக் குவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian student go graduation function with national flag


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->