ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்..! குடும்பத்தாருக்கு விசா வழங்க ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியைச் சேர்ந்த 28 வயதான சுபம் கார்க் என்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். 

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், சிட்னி நகரில் 27 வயதான டேனியல் நோர்வுட் என்ற வாலிபர் சரமாரியாக பலமுறை இந்திய மாணவனான சுபம் கார்கை கத்தியால் குத்தியதால் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள மருத்துவர்கள் அவர் உயிருக்கு ஆபத்தில்லை, ஆனால் அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாணவனின் குடும்பத்தார் ஒருவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புதுடெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. குடும்ப உறுப்பினருக்கு ஆஸ்திரேலிய விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில்,

இந்த சம்பவம் நடந்த அன்று இரவு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த இந்திய மாணவனை வழியில் மறித்த அந்த வாலிபர் அவரிடமிருந்த பணத்தையும் போனையும் கேட்டுள்ளார். ஆனால் இந்திய மாணவன் அதனை தர மறுத்தனால், அந்த வாலிபர் மாணவனை கத்தியால் குத்தியாதாக விசாரணையில் தெரிய வந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian student knief stabbing in austreliya


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->