" கடவுளே என்ன கொடுமை இது "..45 வயது பெண்மணியை விழுங்கிய மலைப்பாம்பு!! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணியை விழுங்கிய 16 அடி நீள மலைப்பாம்பு. மாயமானவரை தேடியும் கிடைக்காததால் நகர முடியாமல் கிடந்த மலைப்பாம்பை வெட்டி பார்த்தபோது உள்ளே கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சி.

பாம்பை கண்டால் படை நடுங்கும் என்று பழமொழி உள்ளது. பாம்பு வகைகளில் மிகப்பெரிய தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கொண்டது மலை பாம்பு. மலைப்பாம்பு முழு ஆட்டை விழுங்கியதாக நாம் பல்வேறு செய்திகளை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தோனேசியா நாட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மலைப்பாம்பை விழுங்கிய தகவல் அனைத்து நாட்டு மக்களிடையும் பெரும் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 இந்தோனேசியா நாட்டின் ஃபரிதா என்பவர் காலேம்பங் பகுதியில் அமைந்துள்ள சந்தையில் உணவு பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரியாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜூன் 6ஆம் தேதி காட்டு வழியாக சந்தைக்கு சென்றதாகவும் அதன் பின் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரின் கணவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மனைவியை தேடி சென்று உள்ளார். எங்கு தேடியும் மனைவி கிடைக்காத நிலையில், காட்டுப்பகுதியில் வயிறு வீங்கிய நிலையுடன் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் கிடந்ததை கண்டுள்ளார்.

தனது மனைவியை ராட்சத மலைப்பாம்பு விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்ட கணவர் ஊர் மக்கள் உதவியுடன் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றுப் பகுதியில் கிழுத்து பார்த்தபோது சேறு படிந்த நிலையில் பெண்ணில் உடல் காணப்பட்டுள்ளது. அதனை கண்ட அப்பகுதி ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தோனேஷியாவில் இதற்கு முன்னர் கடந்த 2022ம் ஆண்டு இதுபோன்று காட்டு வழியாக சென்ற பெண் ஒருவரை ராட்சத மலைப்பாம்பு விழுங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணியை ராட்சத மலைப்பாம்பு விழுங்கிய சம்பவம் இந்தோனேசியா நாடு மட்டுமன்றி உலக உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indonesia country 45 years old women killed mountain snake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->