லண்டனின் நடனமாடிய அரசர் மூன்றாம் சார்லஸ் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி உயிரிழந்தார். அரசியின் மரணத்திற்கு பிறகு அவரின் மூத்த மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அதன் பின்னர்  நாடு முழுவதும் பயணம் செய்து அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அதன் படி, நேற்று லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மன்னர் சார்லஸ் அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து அங்கு வாசிக்கப்படும் இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார். 

இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சாரலஸ் உற்சாகமாக நடனமாடிய வீடியோ பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland king third charles dance in london


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->