சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப் படுத்தும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது தெரியுமா? - Seithipunal
Seithipunal



விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் கடந்த 2000ம் ஆண்டு விண்வெளி வீரர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான பணிகள் கடந்த 1998ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 

இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய 5 நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த விண்வெளி நிலையமானது பூமியில் இருந்து சுமார் 400 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. 

இந்நிலையில் இந்த விண்வெளி நிலையத்தின் ஆயுட் காலம் வரும் 2030ம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் விண்வெளியில் இருந்து இந்த விண்வெளி நிலையம் பாதுகாப்பாக அப்பறப் படுத்தப்பட உள்ளது. அதன்படி இந்த விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து மிக கவனமாக அப்புறப் படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இதற்காக ஒரு விண்கலம் உருவாக்கப் பட உள்ளதாகவும், அந்த பணியினை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இதற்கான ஒப்பந்த மதிப்பு 843 மில்லியன் டாலர் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் 4.5 கிலோ எடை கொண்ட இந்த விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வந்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உடைக்க வேண்டிய ஏற்பாடுகளை இப்போதிருந்தே நாசா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இல்லாவிட்டால் இது தானாகவே பூமியின் மேல் விழுந்து மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

International Space Station Handed Over For Evacuation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->