மருத்துவமனை மீது குண்டு வீசிய இஸ்ரேல்!!! பரிதாப நிலையில் காசா...!!!
Israel bombed hospital Gaza sorry state
காசாவுக்கு எதிரான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்திள்ளது.

இதில் கடந்த மாதம் 18-ம் தேதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் கடுமையான போர் தொடுத்து கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே வடக்கு காசா நகரிலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வடக்கு காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-அஹ்லி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மருத்துவ சேவை அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் தவித்து வருகிறார்கள்.
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து உருக்குலைந்தது.இந்தத் தாக்குதலால் மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
English Summary
Israel bombed hospital Gaza sorry state