பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்.!
Isreal missile attack on Gaza in Palestine
மத்திய கிழக்கு ஆசியா நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆயுத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் காஸா பகுதியிலிருந்து மீண்டும் தாக்கப்படுவதற்கான சைரன் தங்களுக்கு ஒலித்ததால் காஸா பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காஸா பகுதியில் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கும், சேமிப்பதற்கும் பயன்படுத்திய இலக்குகளின் மீது நடத்தப்பட்டதாக இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதல் தொடர்பாக கட்டிடங்கள் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்பட்டதற்கான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
English Summary
Isreal missile attack on Gaza in Palestine