அதிகரித்து வரும் குரங்கு அம்மை.! தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிய இத்தாலி.! - Seithipunal
Seithipunal


ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஐரோப்பாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

பெரும்பாலன நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது.

இந்நிலையில் தொற்று நோயை தடுக்க சில நாடுகள் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகின்றன.

இதனைத்தொடர்ந்து இத்தாலியில் குரங்கு அம்மைக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முதல்நாளில் 10 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டடுள்ளது.

மேலும் பெரியம்மை மற்றும் குரங்கு அம்மை வைரஸ் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை என்பதால், பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட ஜின்னியோஸ் தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராகவும், வலுவாகவும் செயல்படுகிறது என்று ரோம் நகரின் ஸ்பாலன்ஜானி தொற்று நோய் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Italy started to vaccinate people for monkeypox virus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->