ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2.39 லட்சம் கோடி முதலீடு.! ஜப்பான் முடிவு - Seithipunal
Seithipunal


வட ஆப்பிரிக்கா நாடான துனுசியாவில் ஆப்பிரிக்கா வளர்ச்சிக்கான 8வது டோக்கியோ சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் காணொளி வழியாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.2.39 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

இந்த முதலீட்டில் ரூ.31,980 கோடி பசுமை தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கும், ரூ.39,980 கோடி ஆப்பிரிக்க நாடுகள் கடன் நிலையில் இருந்து மேம்படுவதற்காகவும் செலவிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 3 லட்சம் ஆப்பிரிக்க மக்களை கல்வி, சுகாதார நலம் மற்றும் தொழில்துறைகளில் பணிபுரிய தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரூ.2,399 கோடி ஆப்பிரிக்க நாடுகளின் உணவு உற்பத்தியை மேம்படுத்த கடனாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan plans to invest 2 lakh crore in Africa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->