நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டது - மறைந்தாலும் மற்றொருவருக்கு பார்வை..!
Kannada Actor Puneeth Rajkumar Eye Donated 29 Oct 2021
மறைந்த கன்னட பவர் ஸ்டார், நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டது.
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் (வயது 46). இவர் கன்னட திரையுலகில் பிரபல நடிகரும் ஆவார். இதுமட்டுமல்லாது, பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்று பல பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 17 மார்ச் 1975 ஆம் வருடம் சென்னையில் பிறந்த புனித் ராஜ்குமார், கடந்த 1987 ஆம் வருடங்களுக்கு பின்னர் கன்னட திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் தொடக்க காலங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து, அன்றைய நாட்களிலேயே பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, தற்போது 29 திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
வசந்த கீதா (1980), பாக்யவந்தா (1981), சாலிசுவ மொதகலு (1982), ஈரடு நட்சத்திரங்கள் (1983), பக்த பிரஹலாதா, யாரிவானு மற்றும் பெட்டட ஹூவு (1985) ஆகிய படங்கள் பெரும் பாராட்டுகளையும் பெற்றன. பெட்டட ஹூவு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருக்கு, சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருதும் கிடைத்தது.
அப்பு (2002), அபி (2003), வீர கன்னடிகா (2004), மௌர்யா (2004), ஆகாஷ் (2005), அஜய் (2006), அரசு (2007), மிலானா (2007), வம்ஷி (2008), ராம் (2009), ஜாக்கி (2010), ஹுடுகாரு (2011), ராஜகுமார் (2017), மற்றும் அஞ்சனி புத்ரா (2017) ஆகிய படங்கள் வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வழக்கம்போல உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்த புனித் ராஜ்குமார், திடீரென நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை அழைத்துக்கொண்டு பெங்களூர் விக்ரம் மருத்துவமனைக்கு சென்ற குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள மைதானத்தில் வைக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் கண்கள் தானத்திற்கு பதிவு செய்திருந்த நிலையில், அவரது மறைவுக்கு பின்னர், அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக மறைந்தாலும் அவரின் கண்களால் ஒருவர் பார்வையை பெறும் பலனை பெற்றுள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kannada Actor Puneeth Rajkumar Eye Donated 29 Oct 2021