கஜகஸ்தான் விமான விபத்து... 42 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் !
Kazakhstan plane crash At least 42 people have lost their lives
கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தவிமானம் திடீரென கிழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அவ்வவ்போது விமானங்கள் விபத்துக்குள்ளாகுவதும் காணாமல் போகும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு .குறிப்பாக சிலவருடங்களுக்கு முன்பு கடலில் விழுந்து காணாமல் போன விமானங்களையும் ,பயணிகளையும் கண்டுபிடிக்கமுடியாமல் இன்றும் அதை தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.இப்படி பல்வேறு விமானவிபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில் அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷியாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று 67 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. .விமானம் கஜகஸ்தான் நாட்டின் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் நிலவியதால் விமானத்தை கஜகஸ்தானில் உள்ள அக்டாவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். அப்போது திடீரென விமானத்தின் மீது பறவைகள் மோதியுள்ளன.
இதையடுத்து, விமானத்தை வேகமாக தரையிறக்க விமானி முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக விமானம் திடீரென கிழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kazakhstan plane crash At least 42 people have lost their lives