இந்திய குடும்பங்கள் துக்கம் அனுசரித்து வரும் நிலையில், கைது செய்ய உத்தரவிட்ட குவைத் அரசாங்கம் !! - Seithipunal
Seithipunal


குவைத்தில் பணிபுரியும் 50 புலம்பெயர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் தீ விபத்துக்குள்ளானதில், இந்தியர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை துக்கத்தில் மூழ்கி உள்ள நிலையில் கட்டிடத் தீ விபத்துக்கு காரணம் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகமான எண்ணெய் வளம் கொண்ட நாடு குவைத், அதன் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள், அவர்களில் பலர் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் கட்டுமானம் மற்றும் சேவைத் தொழில்களில் பணிபுரிகின்றனர்.

வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் மங்காஃப் பகுதியில் கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள் வசிக்கும் தொகுதியின் ஒரு கட்டிடத்தில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் 49 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, மேலும் காயமடைந்தவர்களில் ஒருவர் இறந்ததாக குவைத் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அல்-யஹ்யா தனது அறிக்கையில் வெளியிட்டார்.

இந்த விபத்தில் இறந்த கேரளாவை சேர்ந்த ஒருவரது குடும்பம், இறந்தவர் ஒரு வசதியான குடும்பத்தில் இருந்து வரவில்லை, எனவே அவர் குவைத் சென்று பனி புரிவது குடும்பம் சிறப்பாக செயல்பட ஒரு வாய்ப்பாக இருந்து உள்ளது. ஆனால் தற்போது அந்த குடும்பம் திசை தெரியாமல் நிற்கிறது.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த கொடூரமான தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார், அவர்களின் குடும்பத்திற்கு 200,000 ரூபாய் ($2,400) கொடுப்பதாக அறிவித்தார்.

சில உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதாகவும், எனவே பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைகள் நடந்து வருகின்றன" என்று குவைத் அரசு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuwait issued against the accused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->