காசாவை கைப்பற்றுவோம்..டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
Let's take Gaza. Trumps Surprise Announcement!
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளதுஎன்றும் காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் போர் ஏற்பட்டது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த போரினை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டன. அப்போது நீண்ட முயற்சிக்கு பின்னர் போர் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து காசா பகுதியில் இருந்து அதிகப்படியான பாலஸ்தீனிய அகதிகள் வெளியேறும் சூழலில் அவர்களை ஜோர்டான், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகள் அதிகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் கூறினார். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய கிழக்கு நாடுகள் நிராகரித்தன.
இந்த சூழலில் டொனால்டு டிரம்ப் அழைப்பை ஏற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் டோனால்டு டிரம்பும், பெஞ்சமின் நெதன்யாகுவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும் அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளதுஎன்றும் காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம் என தெரிவித்துள்ளார்.மேலும் சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றி வளர்ச்சி பணிகளை உருவாக்குவோம் என கூறிய டோனால்டு டிரம்பு,இதற்கு நாங்கள் பொறுப்பு என்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம்என்றும் தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலையை நாட்டுவோம்" என்று கூறினார்.மேலும் டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், டொனால்டு டிரம்ப் அறிவிப்பு பற்றி கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்றாகும் என்றும் மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்என்றும் இஸ்ரேல் ஒருபோதும் வலுவாக இருந்தது இல்லை என்றும் ஈரானின் பயங்கரவாத அச்சுறுத்தலும் பலவீனமக இல்லை என்றும் எனினும், எங்கள் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வருவது பற்றியும் எதிர்காலம் குறித்தும் ஆலோசித்தோம் என கூறியுள்ளார்.
மேலும் காசாவில் இஸ்ரேலுக்கு மூன்று இலக்குகள் உள்ளன என கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,ஹமாஸின் ராணுவத்தை அழிப்பது, நிர்வாகத்தை கட்டமைப்பை சீர்குலைப்பது, எங்கள் அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிப்பது ஆகியவை உள்ளன என்றும் காசா இனி ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
English Summary
Let's take Gaza. Trumps Surprise Announcement!