"டியர் ஸ்டீவ்" நாடக காதலனுக்கு சிறப்பான பாடம் புகட்டிய காதலி.!
Local Australian paper today
நம்பிக்கை மோசடி செய்தது பற்றி அறிந்த காதலி ஒருவர் தனது காதலனுக்கு வித்தியாசமான தண்டனையை அளித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் "மெக்கே அண்டு விட்சண்டே லைப் " என்ற பத்திரிகையில் காதலி விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தில் ஜென்னி எனும் பெயரையுடைய காதலி, காதலன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று பத்திரிகை வெளியிட்டுள்ள விளம்பரத்தில்,
"டியர் ஸ்டீவ். நீ, அவளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என நம்புகிறேன். நீ எப்படிப்பட்ட மோசடி பேர்வழி என்று இந்த ஒட்டுமொத்த நகரத்திற்கும் தெரிய வரும்" என தெரிவித்து உள்ளார்.
அப்பத்திரிகையின் 4-ம் பக்கத்தில் வெளியான விளம்பரத்தின் கீழே குறிப்பு ஒன்று உள்ளது.
அந்தக் குறிப்பில், இந்த விளம்பரம் உன்னுடைய கிரெடிட் கார்டு உதவியுடனேயே அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் அடங்கிய விளம்பர தகவலை தனது பேஸ்புக்கில், அந்த பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
English Summary
Local Australian paper today