விவேகானந்தர் சிலையை திறந்து வைத்த மக்களவை சபாநாயகர்..! - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்று, அங்கு இருநாட்டு உறவு குறித்து விவாதித்து வந்தனர். அப்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மெக்சிகோவில் முதல்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்தார். 

அப்போது ஓம் பிர்லா, சுவாமி விவேகானந்தரின் மனித நேயத்திற்கான கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்தார். இதுகுறித்து, ஓம் பிர்லா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்துவைப்பதில் நான் பெருமை அடைகிறேன். லத்தீன், அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் சிலை இதுவாகும். இச்சிலை மக்களுக்கு, குறிப்பாக இப்பகுதி இளைஞர்களுக்கு, மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் உத்வேகமாக இருப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். சுவாமிஜியின் செய்தி மற்றும் மனிதகுலத்திற்கான போதனைகள் புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது. 

அவரது செய்தி முழு மனித குலத்திற்கும் உள்ளது. இன்று மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைத்து அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகிறோம் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 ஓம் பிர்லா, மெக்சிகோ பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இந்திய-மெக்சிகோ நட்புறவு பூங்காவை மக்களவை சபாநாயகர் திறந்து வைத்தார். மேலும், இந்தியாவும் மெக்சிகோவும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதையும், 1947-ல் இந்தியாவை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு மெக்சிகோ என்பதையும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lok saba speaker opened vivekananda statue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->