காதல் தோல்வியில் இருக்கும் இளைஞர்களை மீட்க நிதி ஒதுக்கீடு செய்த நியூசிலாந்து அரசு.! - Seithipunal
Seithipunal


காதலில் தோல்வி அடைந்த காதலர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக ரூ.33 கோடி நியூசிலாந்து அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

உலகம் முழுவதும் காதல் பல்வேறு பரிமாணங்களில் ஆண் - பெண் காதலித்து வருகின்றனர். இதில் அவர்களுடைய காதல் திருமணத்தில் சேராமல் போனால் காதலர்கள் பிரிந்து விடுகின்றனர். தங்களுடைய கருத்து வேறுபடுகளாலும் பிரிந்து விடுகின்றனர்.

இதனால் சிலர் காதல் தோல்வியில் மனம் உடைந்து தற்கொலை செய்யும் அளவிற்கு முடிவு எடுத்து விடுகின்றனர். இந்த நிலையில் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக 'லவ் பெட்டர்' என்ற பிரச்சார குழுவை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது.

மேலும், இதற்காக நியூசிலாந்து அரசு 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, மனம் திறந்து பேச வைப்பது போன்றவை தான் இந்த பிரச்சார குழுவின் வேலை. நியூசிலாந்து நாட்டின் இந்த புது முயற்சிக்கு அந்நாட்டு மக்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love failure councelling love better in newzealand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->