தூக்கத்தில் உயிர்நீத்தார் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் எஸ். சாமி வேலு.!
maleysia india congress leader s.saami velu died
மலேசியவைச் சேர்ந்த இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு இன்று அதிகாலை அகால மரணமடைந்தார்.
மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவர் சாமி வேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936ம் ஆண்டு பிறந்த சாமி வேலு, 1959ம் ஆண்டு மலேசிய அரசியிலில் ஈடுபட்டார்.
பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ள இவர் மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். பிறகு, மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் எஸ். சாமி வேலு, பல்வேறு துறை அமைச்சராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் சாமி வேலு தூக்கத்திலேயே உயிர் நீத்தார். இந்த தகவலை மலேசிய இந்திய காங்கிரசின் எஸ்.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் தெரிவிக்கையில், 'மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சாமி வேலு இன்று உயிரிழந்த செய்தியை வலியுடைய இதயத்துடன் தெரிவிக்கிறேன்.
அவர் மலேசிய நாட்டிற்கும் இந்திய சமூகத்தினருக்கு ஆற்றிய சேவை மிகவும் சிறப்பான ஒன்று' என தெரிவித்தார். சாமி வேலுவின் மறைவுக்கு மலேசியாவின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
English Summary
maleysia india congress leader s.saami velu died