மாரடைப்பால் மயங்கிய நபர் - ஸ்மார்ட் வாட்சியால் உயிர் பிழைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்வான்சி மோரிஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் பால் வாபம். ஹாக்கி வேல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

அதன் படி அவர் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். பின்னர் அவர் தனது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். உடனே லாரா விரைந்து வந்து கணவர் பால் வாபம்மை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது, பால் வாபம் நலமாக உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: "நான் வழக்கம்போல் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். 

அப்போது, மார்பு பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டது. உடனே எனது ஸ்மார்ட் வாட்ச் மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து வரவழைத்து உயிர் பிழைத்தேன். ஸ்மார்ட் வாட்ச் இல்லாவிட்டால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man admitted hospital for heart attack in england


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->