பொதுமக்களே உஷார்.. ஆப்பிரிக்காவில் கொடிய வைரஸ் பரவல்.. 9 பேர் பலி உலக சுகாதார மையம் எச்சரிக்கை.!
Marburg virus spred in Africa 9 peoples death
ஈகுவடோரியல் கினியா நாட்டில் புதிய வகை வைரஸ் நோயால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் தொற்று காரணமாக கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. இந்த நிலையில் தற்போது கொடிய வைரஸ் ஒன்று ஆப்பிரிக்காவில் பரவி வருகிறது.
அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் எனும் கொடிய வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாராபர்க் வைரஸ் ஆனது எபோலோ வைரஸ் போலவே பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மேலும், இந்த வைரஸால் 88 சதவீதம் உயிரிழக்க நேரிடும்.
இந்த வைரஸின் அறிகுறிகள் தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உடல்நல சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படும். மேலும் வைரஸ் பாதித்த நோயாளிகள் பலருக்கு ஏழு நாட்களில் கடுமையான ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகளும் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை முடித்துள்ளது.
இந்த நிலையில் ஈகுவோடோரியல் கினியா நாட்டில் இதுவரை 9 பேர் மார்பர்க் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
English Summary
Marburg virus spred in Africa 9 peoples death