ஒரே நாளில் சுடுகாடான கிராமம்.. பூச்சிகள் முதல் மனிதர்கள் வரை அனைவரும் மரணம்.! - Seithipunal
Seithipunal


ஒரே நாளில் விலங்குகள் முதல் மனிதர்கள் வரை அனைவரும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கிராமத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த சம்பவம் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

கடந்த 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கேமரூன் நாட்டில் உள்ள சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு 9 மணிக்கு திடீரென இடி விழுந்தது போன்ற சத்தம் கேட்டது. இதனையடுத்து அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒரே ஒருவர் மட்டும் மயக்கமான நிலையில், அவர் எழுந்து சென்று பார்த்த போது பெண் ஒருவர் சடலங்களுக்கு நடுவே அழுதவாறு கிடைத்துள்ளார். இதில் பெண்ணின் குடும்பத்தினர் உறவினர்கள் என 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அவர்கள் வளர்த்த 400 கால்நடைகளும் உயிரிழந்தது. மேலும் இரவு ஒன்பது மணிக்கு யார் எங்கே இருந்தார்களோ அங்கேயே உயிரிழந்தே கிடந்துள்ளனர். இதில் மொத்தம் 1746 மனிதர்களும், 3500 விலங்குகளும் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கான காரணம் பின்னாளில் தெரியவந்துள்ளது. அதன்படி அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரியில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு வாயு ஒரே வினோதமான சத்தத்துடன் வெளியேறியுள்ளது. இந்த காற்றை சுவாசித்த மக்கள் மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இப்போதும் அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mass death in African Village


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->