மிகப்பெரிய அளவில் ரஷிய வான்வழி தாக்குதல்....நிலைகுலைந்து போன உக்ரைன்! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷிய ராணுவம் இன்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ தெரிவித்துள்ளார். 

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த போரின் தொடக்கத்தில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதே சமயம் உக்ரைனுக்கு பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷிய ராணுவம் இன்று மிகப்பெரிய அளவில் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் மின்உற்பத்தி கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹாலுஸ்சென்கோ தெரிவித்துள்ளார். அதிநவீன டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் உக்ரைனின் வான்பரப்பில் பல்வேறு முறை ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. குறிப்பாக உக்ரைனின் மேற்கு பகுதிகளில் பாலிஸ்டிக் கின்ஸால்(Kinzhal) ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Massive Russian airstrikes Ukraine is in turmoil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->