இஸ்ரேல் : அரசாங்கத்தை கலைப்போம் - அமைச்சர்கள் எச்சரிக்கை!
Ministers Warns Israel Government as Dissolved the Government
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேல் , காஸா இடையேயான போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை வெளியிட்டார். இந்நிலையில் இந்த முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டால், நாங்கள் அரசைக் கலைப்போம் என்று இரு அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம் போர் நிறுத்தத்தை நெதன்யாகு ஏற்றுக்கொண்டால், தான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன் என்று இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஹமாஸ் குழுவினரை அழித்து அவர்களிடம் இருந்து அனைத்து பணயக் கைதிகளையும் மீட்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த முன்மொழிவு, மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆறு வார போர் நிறுத்ததுடன் தொடங்கும். மேலும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் முழுவதும் காஸா பகுதிகளில் இருந்து வெளியேறவும், நிரந்தர சண்டை நிறுத்தம், பணயக் கைதிகளை விடுவித்தல், சர்வதேச உதவியுடன் ஒரு பெரிய புனரமைப்பு திட்டம் ஆகியவை இந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளன..
இந்நிலையில் ஹமாஸை அழித்து அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்காமல், போரை நிறுத்தும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், நாங்கள் அரசாங்கத்தை கலைப்போம்" என்று இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ் நகரத்தில் பேரணி நடத்தியுள்ளனர்.
English Summary
Ministers Warns Israel Government as Dissolved the Government