பிற மாநிலங்களில் அமலுக்கு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.! - Seithipunal
Seithipunal


பிற மாநிலங்களில் அமலுக்கு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.!

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைகிறார்கள். 

பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் உள்ளிட்ட காரணத்திற்காக இந்தத் திட்டம் செயல்படுத்துவதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்தத் திட்டம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அது போலவே தமிழகத்தில், காலை உணவுத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் சென்னைக்கு  வந்தனர். 

அதன் படி அவர்கள் ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானா அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் திட்டம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்துவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morning food scheme implements in telungana schools


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->