உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது? இந்திய பாஸ்போர்ட்டின் மதிப்பு என்ன?!
Most Powerful Passports India Passport
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் அப்டேட் செய்து வெளியிட்டுவரும் ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ நிறுவனம், இந்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
முதலில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்பதை எப்படி நிர்ணயம் செய்வார்கள் என்ற உங்களின் கேள்விக்கு பதில் மிக எளிதானதுதான்.
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பதை பொறுத்தே இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்த அடிப்படையில் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க கூடிய பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பாஸ்போர்ட்கள் முதலிடம் பிடித்துள்ளது.
ஸ்வீடன் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், போர்ச்சுக்கல் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்க, கனடா, ஹங்கேரி 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் 11-வது இடத்தையும், இஸ்ரேல் 21-வது இடத்திலும், ரஷ்யா 51-வது இடத்திலும் உள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 80-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
இந்தியாவின் பிற அண்டை நாடுகளான மாலத்தீவு 58-வது இடத்தையும், சீனா 62-வது இடத்தையும் பிடித்துள்ளது.
பூடான் 87-வது இடத்தையும், மியான்மர் 92-வது இடத்தையும், இலங்கை 96-வது இடத்தையும், வங்கதேசம் 97-வது இடத்தையும், நேபாளம் 98-வது இடத்தையும் பிடித்துள்ளன.
பாகிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103 ஆகிய கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
இறுதியாக கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் நாடு உள்ளது, இந்நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 28 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
இவை அனைத்தும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) தரவுகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Most Powerful Passports India Passport