நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியா பெண் ஊழியர் மீது தாக்குதல் - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோவ் பகுதியில் உள்ள ரெடிஷன் ரெட் நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஹோஸ்டஸ் கடந்த வியாழக்கிழமை மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்.  

உடனே அந்தப் பணிப்பெண் அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதனால் பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

மேலும், மர்ம நபர்கள் அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்களோ? என்று பயந்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதற்கிடையே அந்த ஹோட்டலில் தங்கியிருந்த சிலர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious peoples attack air india company woman employee in landon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->