பூமியை நோக்கி வரும் 150 அடி அகலம் கொண்ட விண்கல் - நாசா எச்சரிக்கை
NASA warns 150 feet asteroid coming towards earth
ஏப்ரல் 6ஆம் தேதி 150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று 67656 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கி வருவதாக நாசா எச்சரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் பூமிக்கு அருகே 2.61 மில்லியன் மைல்கள் தொலைவில் வரும் இந்த விண்கல்லுக்கு எஃப்.இஸட் 3 என நாசா பெயரிட்டுள்ளது.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமியை நோக்கி எப்.யூ.6, எஃப் எஸ் 2, எப் ஏ 7, எஃப் கியூ 7, எஃப்.இஸட் 3 என பெயரிடப்பட்ட 5 சிறிய விண்கல்கள் வருவதாகவும், அவற்றில் இரண்டு விண்கல்கள் பூமிக்கு மிக அருகே வருவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக எஃப்.இஸட் 3 பூமிக்கு அருகே வருவதாகவும் அதனால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் விண்வெளியில் இருக்கும் சிறிய விண்கற்கள் அவ்வப்போது பூமியை கடந்து செல்கிறது என்றும், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் மிகச்சிறிய விண்கற்களும் மேற்பரப்பிலேயே எரிந்து சாம்பலாகி விடும் என்று நாசா விண்வெளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
NASA warns 150 feet asteroid coming towards earth