குரங்கு அம்மை பரவல் எதிரொலி: அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஐரோப்பாவில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆப்பிரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் 6,600-க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. மேலும், நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்பட பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.

இதை தொடர்ந்து, குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளதால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

இதையடுத்து அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National emergency in US due to monkey pox


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->