கூட்டமாக செல்லும் நண்டுகளுக்கு வழிவிட்டு நின்ற பொதுமக்கள்.! என்ன காரணம்? - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில், எந்த பக்கம் பார்த்தாலும் சிவப்பு நிறத்தில் நண்டுகளாக காணப்படுகின்றது. நாடுகளின் இனப்பெருக்க காலமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் உள்ளது. இதன் காரணமாக சிவப்பு நிற நண்டுகள் அனைத்தும் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக செல்கின்றன. 

இவ்வாறு செல்லும்போது ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, செல்லும் வழியில், அவர்களது துணையான பெண் நண்டுகளையும் அழைத்துக்கொண்டு கடலுக்கு செகிறது.

இந்தியப் பெருங்கடலுக்குச் செலும் இந்த நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டையிட்டு, அந்த முட்டைகள் அனைத்தும் பொறித்த பிறகு அவற்றிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் கடற்கரைக்கு வந்து, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தங்கள் வீடான காடுகளை நோக்கி செல்கிறது. 

இந்த முட்டைகளிலிருந்து லட்சக்கணக்கான குஞ்சுகள் வெளிவருகிறது. ஆனால், அதில் பெரும்பாலான குஞ்சுகள் மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு உணவாகி விடுவைத்தால், மீதம் இருக்கும் நண்டுகள் தான் காட்டிற்கு சென்றடைகிறது. 

இந்நிலையில் அரசு அலுவலர்கள், நண்டுகளின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, நண்டுகள் கடலுக்கு செல்வதற்கு ஏதுவாக பாதை அமைத்திருக்கிறார்கள். அதேபோல், சுற்றுலா பயணிகளையும் தங்களுடைய வாகனங்களை சாலையோரமாக நிறுத்துமாறு தெரிவித்து, நண்டுகள் செல்வதை பார்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near austreliya red crabs going to sea for reproduce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->