மெக்சிகோ || பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுத்தது யார்.. போதைக் கும்பலுக்கு தொடர்பு உண்டா?..  - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் உள்ள தெற்கு மாகாணமான சியாபாஸில் அமைத்துள்ள மேல்நிலை பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றது. அப்போது திடீரென மாணவர்கள் பலர் தொடர்ந்து மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 60 மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

இதுகுறித்து, மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில், அவர்கள் அனைவருக்கும் விஷம் தரப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில், கடந்த இரண்டு வாரங்களில் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள மேலும் இரண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், மூன்று பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விஷம் தரப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் போதை பொருள் கும்பல் இருக்கலாம் என்று மெக்சிகோ போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் சில தெரிவித்ததாது, மாணவர்களுக்கு அசுத்தமான தண்ணீர் அல்லது புட்பாயிஷன் ஏற்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து சியாபாஸ் மாகாண காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mecsico 60 school students unconsious


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->