புத்த கோவிலில் போதைப்பொருள் சோதனை - நான்கு துறவிகளின் புனிதர் அந்தஸ்து நீக்கம்.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் உள்ள பெத்சாபன் மாகாணம் பங் சாம் பான் என்ற மாவட்டத்தில் புத்த கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் இருந்த தலைமை சாமியார் உள்பட நான்கு துறவிகளிடம் போதை பொருள் பரிசோதனை செய்யப்பட்டது. 

அந்த பரிசோதனையில், அனைவரும் மெத்தாம்பிடமைன் போதை பொருள் பயன்படுத்தி உள்ளனர் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, கோவிலில் அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள் அனைத்தையும் செய்வதற்கு தடை விதித்து, அவர்களின் புனிதர் அந்தஸ்தும் கைப்பற்றப்பட்டது.

அதன் பின்னர், அவர்கள் அனைவரும் போதை பொருள் மறுவாழ்வு சிகிச்சைக்காக சுகாதார மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், இந்தக் கோவிலில் சாமியார்களே இல்லாத நிலையில், அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் எந்த சடங்குகளையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

அதேபோல், கோவிலில் தரிசனம் செய்ய வருபவர்கள், சாமியார்களுக்கு அவர்களின் நல்ல செயல்களுக்காக நன்கொடையாக உணவு வழங்குவார்கள். தற்போது, இதனை செய்ய முடியாத நிலை உள்ளது என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

மேலும், தாய்லாந்துக்கு மியான்மரில் இருந்து லாவோஸ் வழியாக போதை பொருள் சப்ளை நடைபெற்று வருகிறது என்று ஐ.நா. போதை பொருள் மற்றும் குற்ற செயல்களுக்கான அலுவலகம் தெரிவித்தது. இதன் மூலம், அரை டாலருக்கு குறைவான விலையில் தெருவிலேயே போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near thailand budhdha temple four monks arrested for drugs use


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->