இந்த நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை!.... 9 நாட்களுக்கு சலுகை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் விளைவாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த சுற்றுலா துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால், அந்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக  9 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று  சீனா அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் பட்டியலில்,  ஜப்பான்,  ருமேனியா, மால்டா, பல்கேரியா,குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள வரும் சுற்றுலா பயணிகள், 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம் என்றும், இந்த திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், தற்போது சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No visa required to visit this country 9 days offer notification


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->