உலகை அதிரவைத்த முதல் பலி., பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்.!
Omicron Variant 1st dead
பிரிட்டனில் ஒமிக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்
ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலுக்கு பரவி, பின் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 59 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் கொரோனா 3-வது அலை தாக்க வாய்ப்பு உள்ளதா என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் ஒருவர் கூட இறக்காத நிலையில், முதல் முறையாக பிரிட்டன் நாட்டில் ஒருவர் இந்த ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத நிலையில், முதல் முறையாக பிரிட்டன் நாட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.