மீண்டும் ஒரு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பதவி.. டிரம்ப் அதிரடி! - Seithipunal
Seithipunal


 அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீலான ஹர்மீத் கே தில்லானை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபா் தோ்தலில், நிகழாண்டு குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில் அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியை சோ்ந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் தோ்வாகியுள்ளாா். அந்நாட்டின் 47-ஆவது அதிபராக அவா் தோ்வாகியுள்ள நிலையில், துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை நியமித்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்க நீதித்துறையின் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீலான ஹர்மீத் கே தில்லானை நியமிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பதிவில் கூறும்போது, அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக ஹர்மீத் கே. தில்லானை பரிந்துரைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் தனது வாழ்க்கை முழுவதும், நாட்டின் சிவில் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து நிலைத்து நிற்கிறார். ஹர்மீத் நாட்டின் முன்னணி தேர்தல் வழக்கறிஞர்களில் ஒருவர். தனது புதிய பாத்திரத்தில், ஹர்மீத் நமது அரசியலமைப்பு உரிமைகளின் அயராத பாதுகாவலராக இருப்பார்.

குடிமை உரிமைகள் மற்றும் தேர்தல் சட்டங்களை நேர்மையாகவும் உறுதியாகவும் செயல்படுத்துவார் என்று தெரிவித்தார்.டிரம்பின் புதிய அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்ட 4-வது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்மீத் தில்லான் ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Once again an Indian-origin woman gets a key post Trump in action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->