பாகிஸ்தான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் சமீப காலமாக குண்டு வெடிப்புகள் மற்றும் பயங்கரவாத தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பாகிஸ்தான் தலிபான் எனப்படும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பு அரசுடன் செய்திருந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த பின், இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபா் பக்துன்குவா மாகாணத்தின் லாக்கி மா்வட் மாவட்டத்தில் வா்கரா காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் எதிர்பாராத விதமாக திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

இருப்பினும் இந்த தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One killed in terrorist attack on Pakistan police station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->