ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து மேலும் ஒரு நாடு விலகல்!
One more country withdraws from UN Human Rights Council
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அறிவித்திருந்தநிலையில் இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பது:, "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது என்றும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது என்றும் மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "மனித உரிமைகளை மீறுபவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பாதுகாத்து அவர்களை ஒளிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை பேய்த்தனமாக சித்தரிக்கிறது என்றும் இந்த அமைப்பு மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டைத் தாக்குவதிலும், யூத விரோதத்தைப் பரப்புவதிலும் கவனம் செலுத்தியுள்ளது என குற்றசாட்டியுள்ளார்.

மேலும் "எங்களுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறதுஎன்றும் UNHRC-யில், இஸ்ரேல் மட்டுமே அதற்கென மட்டுமே உருவாக்கப்பட்ட தனி விதிகளை கொண்ட ஒரே நாடு. இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்களுக்கு உள்ளாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர்,இது கவுன்சிலில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் 20% க்கும் அதிகமானவை என்று கூறியுள்ளார். ஈரான், கியூபா, வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு எதிரானதை விட அதிகம் என்றும் இஸ்ரேல் இனி இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ளாது என்று அவர் மேலும் கூறினார்.
English Summary
One more country withdraws from UN Human Rights Council