ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, HIV பாதித்த நபர் - மருத்துவர்கள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரே நேரத்தில் குரங்கம்மை, கொரோனா மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்புக்குள்ளான நபர் கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் மீண்டும் சொந்த ஊருக்குதி ரும்பினார். அவர் நாடு திரும்பியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 அதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் தெரியவந்ததது. சிலநாள்களுக்குப்பின் அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் கூடிய வகையில் உடலில் புண்கள் தென்படத்தொடங்கின. மருத்துவமனையில் அவசரசிகிச்சைபிரிவில்அவர் அனுமதிக்கப்பட்டார்.

 அப்போது நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு குரங்கம்மை மற்றும் எச்ஐவிபாதிப்புஉறுதிசெய்யப்பட்டது. அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கொரோனா மற்றும் குரங்கம்மைபாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ்செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இந்த நபர் கடந்தாண்டு மற்றொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஒத்துக்கொண்டார்.

ஆனால் அந்த நபருக்கு எச்ஐவிஷதொற்று ஏதும் இல்லை என இவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். குரங்கம்மை மற்றும் கொரோனா ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் என்பதை மருத்துவ உலகின் ஆய்வுக்கு அறிமுகம் செய்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person affected covid, monkeypox and HIV in italy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->