வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.  

இதற்கிடையே கடந்த மாதம் 29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர்   30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் தமிழ் சங்கத்தினர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாகமாக வரவேற்பு அளித்து வரும் நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில், வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Our relations that embrace me with longing Chief Minister MK Stalins pride


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->