பாகிஸ்தான் இன்னும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் ? - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 18வது லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் பெருவாரியான வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கப் போவதாக முடிவு செய்து அனைத்து கட்சி தலைவர்களாலும் ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டது. 

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதிலும் இருந்து அனைத்து தலைவர்களாலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன, இதை கண்டு பாகிஸ்தான் திகைத்துப் போனது. இருந்தாலும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த வாழ்த்தும் வரவில்லை. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளை இந்தியா அழைத்ததுள்ளது, ஆனால் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்க வில்லை.

18வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் ஜெஹ்ரா பலோச் இதை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், "இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்க்க விரும்புகிறோம்".

"இந்திய மக்களுக்கு அவர்களின் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அவர்களின் தேர்தல் செயல்பாடு குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. புதிய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவில்லை. எனவே முன்கூட்டியே வாழ்த்து தெரிவிப்பது நன்றாக இருப்பதுபோல் எங்களுக்கு தோன்றவில்லை."

மேலும் , "பாகிஸ்தான் எப்போதும் இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் உறவுகளை நாடுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய தகராறு உட்பட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான உரையாடலை நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகிறோம்." என்று மும்தாஸ் ஜெஹ்ரா பலோச் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan didnot congratulate Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->