பிளாஸ்டிக் பையில் சமையல் எரிவாயு - இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் அவலம்!  - Seithipunal
Seithipunal


பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சமையல் எரிவாயுவைப் பெறுவதற்கு, சிலிண்டர்களுக்குப் பதிலாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட எரிவாயுவை பயன்படுத்தும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் தான் இந்த நிலை உருவாகியுள்ளது. சமையல் எரிவாயுவை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளை மக்காள் பயன்படுத்துவதை சிலர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

எரிவாயு குழாய் இணைக்கப்பட்ட கடைகளில், வாழ்வு பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி மக்களுக்கு விற்பனையை செய்து வருகின்றனர். 

இந்த பிளாஸ்டிக் பைகளில் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப முடியும் என்றும், பின்னர் ஒரு சிறிய மின்சார பம்ப் உதவியுடன் எரிவாயுவை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Economic Crisis Cooking Gas


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->