பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைப்பு! கண்டனம் தெரிவிக்கும் எதிர் காட்சிகள்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 

அதிபர் ஆரிப் ஆல்வி, இதற்கான உத்தரவை பிறப்பித்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய 3 நாட்கள் இருந்த நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்பாகவே நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

கடந்த 2018- ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. 

இந்த கூட்டணி ஆட்சியானது, இம்ரான் கானின் தெஹ்ரிக் இன்சாஃப் கட்சியின் தலைமையில் அமைந்தது. இவர் பிரதமராக 4 ஆண்டுகள் இருந்தார். 

இந்நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலகி கொள்ளுமாறு தெரிவித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அவர் தோல்வியுற்று பதவி இழந்தார்.

இதனை அடுத்து, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே நேற்றிரவு நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவைப் போல பாகிஸ்தானிலும் நாடாளுமன்றத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடைபெறுகிறது. பதவிக்காலம் முடிந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தபட வேண்டும்.  

அதற்கு முன்னரே கலைத்தால், நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் 90 நாட்களில் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். இதனால் பிரதமர் முன் கூட்டியே நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அண்மையில் தான் அரசு கருவூலப் பரிசுப் பொருட்களில் ஊழல் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 5 ஆண்டுகள் இம் ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியாது. இனி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் இம்ரான் கான் இல்லாத களத்தை சந்திக்கலாம் என்பதாலேயே பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக இம்ரான் கான் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Parliament early dissolution


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->