பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்(79) காலமானார்
Pakistani former President Pervez Musharraf dies aged 79
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நலக்குறைவால் காலமானார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷாரப், நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து இன்று காலமானார். இவருக்கு வயது 79.
கடந்த 1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று டெல்லியில் பிறந்த இவர் 1964-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் இணைந்து அதன் தளபதியாகவும் உயர்ந்தார். மேலும் இந்திய-பாகிஸ்தான் போர்களில் வீரராகவும் இருந்தார். இதையடுத்து 1999இல் பாக்கிஸ்தானிய அரசாங்கத்தை இராணுவம் கையகப்படுத்திய பிறகு பாகிஸ்தானின் பத்தாவது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இந்நிலையில் கடந்த 2007-ல் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இவர் கடந்த 8 ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistani former President Pervez Musharraf dies aged 79