ஆஸ்திரியாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.. 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் 100க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தரையில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன. மேலும் 2 ரயில் பெட்டிகள் தண்டவாளத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் உருண்டு விழுந்தன. அதில் அந்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி நசுங்கின.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passenger train derails in Austria 2 killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->