பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி : லாரி பின்னால் ஓடும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், வெள்ளமும் ஏற்பட்டது. இதில், கோடிக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. அதிலும் குறிப்பாக பயிர்சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. 

இதனால், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக் குறை ஏற்பட்டது. அதனை ஈடு செய்வதற்கு பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து வந்தது. 

இருப்பினும் அங்கு உணவு தானியங்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆனால், அங்கேயும் ஏராளமானோர் முந்திச் சென்று பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

பொருளாதார நெருக்கடியினால், பாகிஸ்தானில் உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும், நாட்டின் முக்கிய உணவான கோதுமை அதிகளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதாவது, 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples run to behind lorry for Economic crisis in pakisthan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->