அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி.! செல்பி எடுத்து கொண்டாட்டம்.!
peru country airport flight fire accident couple selfi on flight
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 19ம் தேதியன்று விமானம் ஒன்று ஓடுபாதையில் குறுக்கே வந்த தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் உள்ள பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், தீயணைப்பு வாகனத்தில் இருந்த வீரர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஒரு தம்பதி, விபத்துக்குள்ளான விமானத்தின் முன்பு நின்று, தங்களுக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை என்பதை கொண்டாடும் விதமாக சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அந்த போட்டோவை இணையத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் அதில், "வாழ்க்கை தங்களுக்கு இரண்டாம் வாய்ப்பை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் வைரலான இந்த பதிவு நெட்டிசன்கள் மனதைக் கவர்ந்தது.
English Summary
peru country airport flight fire accident couple selfi on flight