பொதுமக்களே உஷார்.. 30 நிமிடங்கள் போன் பேசினால் உயர் இரத்த அழுத்தம் - ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
Phone Talk more than 30 minutes increase high blood pressure
உலகம் முழுவதும் தற்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முன்னேறி வருகிறது. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்தாலும், அதே அளவிற்கு தீங்கும் விளைவிக்கின்றன.
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அதிலும் குறிப்பாக குழந்தையை சமாளிப்பதற்கு பெரும்பாலும் தங்களது ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்து கையில் கொடுத்துவிடுகின்றனர்.
இதனால் குழந்தைகளே பல மணி நேரங்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்த தொடங்கவிட்டன. பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்று குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் செல்போன் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவலை சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு 12% வாய்ப்புள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
English Summary
Phone Talk more than 30 minutes increase high blood pressure